மரபுச் சொற்கள்
மரபுச்சொற்களின் திரட்டு
Terms | Meaning / Definition |
---|---|
அ | |
அரக்கப் பரக்க | அவசரம் அவசரமாக அவசரமும் பதற்றமும் |
அள்ளி இறைத்தல் | அளவுக்கு மேல் செலவழித்தல் |
அள்ளி விடுதல் | ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல் |
அவசரக் குடுக்கை | ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்து செய்துவிடுபவன் |
ஆ | |
ஆறப் போடுதல் | ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்தி செய்தல் |
ஆழம் பார்த்தல் | ஒருவருடைய உள்ளக் கருத்தை அறிந்து செயல்படுதல் |
எ | |
எடுப்பார் கைப்பிள்ளை | சுயமாகச் சிந்திக்காமல் பிறர் சொல்கிறபடியெல்லாம் நடப்பவர் |
ஏ | |
ஏட்டுச்சுரைக்காய் | அனுபவமில்லாத நூல் படிப்பு நடைமுறைக்குப் பயன்படாத அறிவு |
ஒ | |
ஒரு கை பார்த்தல் | மோதிப்பார்த்தல் எதிர்கொள்ளுதல் |
ஒற்றைக் காலில் நிற்றல் | விடாப்பிடியாக நிற்றல்/பிடிவாதமாக இருத்தல் |
ஓ | |
ஓட்டை வாய் | எல்லாவற்றையும் பிறரிடம் கூறும் தன்மை: இரகசியத்தைக் கட்டிக் காத்தவன். எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச் சொல்லிவிடுகின்ற இயல்பு |
க | |
கங்கணம் கட்டுதல் | ஒரு செயலைச் செய்து முடிக்க உறுதி எடுத்துக் கொள்ளுதல் |
கடுக்காய் கொடுத்தல் | ஏமாற்றி தப்புதல் |
கண்ணும் கருத்தும் | முழுக் கவனத்துடன் |
கம்பி நீட்டுதல் | பிறரின் கவனத்திலிருந்து நழுவுதல் |
கரி பூசுதல் | அவமானம் ஏற்படுத்துதல்/மதிப்பைக் கெடுத்தல் |
கரைத்துக் குடித்தல் | ஒரு கவலையை அல்லது துறையைப் பற்றி முழுக்க படித்து அறிதல் |
காது குத்துதல் | சாமார்த்தியமாகப் பொய் சொல்லுதல் |
கிணற்றுத் தவளை | தான் வாழும் சூழலுக்கு அப்பால் இருப்பது எதையும் அறியாதவன் |
கிள்ளுக்கீரை | அற்பமான ஒன்று. மிகச்சுலபமாகச் சமாளித்து விடலாம் என்ற நினைப்பு |
குரங்குப் பிடி | பிடிவாதம்/பற்றிக்கொண்டதைச் சிறிதும் விட்டுக்கொடுக்காத தன்மை |
கை கழுவுதல் | உதவி செய்வதிலிருந்து அல்லது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளுதல் |
கை கூடுதல் | ஒரு காரியம்/ செயல் நிறைவேறுதல் |
கை கொடுத்தல் | தக்க நேரத்தில் உதவி செய்தல் |
கையும் களவுமாய் | குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே |
ச | |
செவி சாய்த்தல் | உடன்படுதல் இணங்குதல் இசைதல் |
த | |
தட்டிக் கழித்தல் | ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல் |
தலை எடுத்தல் | வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருதல் |
தலை குனிதல் | அவமானம் அடைதல் |