உந்துவண்டி தொடர்புடைய சொற்கள் Automobile terms

உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்

I list of page : Automobile terms

உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
indicatorகாட்டி
indicatorகுறியீடு, மானி
indicatorகாட்டி சுட்டிக்காட்டி
idleநிலையிக்கம்
idle speedநிலையியக்க வேகம்
ignitionதீமூட்டல்
ignition circuitதீமூட்டுச்சுற்று - இரண்டு துணைச்சுற்றுக்கள் கொண்டது; முதன்மையது தீமூட்டுச்சாவியால் கட்டுப்படுத்தப்படுகிறது. 12V மின்னழுத்தம் மின்கலத்திலிருந்து மாறுமின்னாக்கி (alternator) மூலமாக வழங்குகிறது. அஞ்சல் மூடப்படும்போது மின்னோட்டம் அடிச்சட்டத்தில் பாய்கிறது. அஞ்சல் திறக்கும்போது, மின்னோட்டப் பாய்வு நிற்கும். இது துணைச்சுருணையில் உயரழுத்தத்தை தூண்டி வில்லிறக்கத்தால் தீமூட்டுகிறது. வாகனம் துவங்கின பிறகு மின்னழுத்த சீர்மி (voltage regulator) மின்கலம் மாறுமின்னாக்கியிலிருந்து மிகையூட்டப்படாமல் பாதுகாக்கிறது.
ignition switchதீமூட்டுத் திறப்பான் - ஐந்துநிலை திறப்பான். START நிலையில் தொடுநிலை (contact) ஏற்படுத்தி, சாவி RUN நிலையில் விடுவிக்கப்படுகிறது. மற்ற நிலைகள் ACCESSORIES, RUN மற்றும் OFF.
independent rear suspensionதனிப்பட்ட பின்புறத் தொங்கல் - ஒவ்வொரு சக்கரமும் தினித்தியங்கும் பின்புறத் தொங்கல் அமைப்பு; இதன் மூலம் வாகனத்தில் ஒடுக்கம் மற்றும் முடுக்கத்தில் ஏற்படும் முன் மற்றும் பின் குனிவை குறைத்து பிடிப்பை மேம்படுத்துகிறது
indicatorகாட்டொளி
inline engineகலன்கள் - (cylinders) நேர்வரிசையாக உள்ள விசைப்பொறி; straight4 என்ற குறியீடு 4-கலன் நேர்வரிசை உள்ளமைவைக் குறிக்கும்; straight6 6-கலன் நேர்வரிசையைக் குறிக்கும்.
intake manifoldஉள்ளிழு பன்மடியம் - காற்றுக்கலக்கிக்கும் (carburettor) உள்ளிழு ஓரதர்களுக்கும் (intake valve) இடையமைந்த குழல்கள். காற்று-எரிபொருள் கலவை நெரிப்பி (throttle) வழியாக பாய்கிறது. இதில் ஒரு உள்ளீடு வாய், கலன்களின் எண்ணிக்கைக்கு தகுந்த பல வெளியீடு வாய்கள் கொண்டது.
ignitionஎரிபற்றல்
idleசோம்பலான, மடிமைவாய்ந்த, சோம்பியிருக்கிற, முயற்சியற்ற, செயல்விருப்பமற்ற, வேலையில்லாத, விளைவற்ற, பயனற்ற, வீணான, செயல்வகையில் ஆதாரமற்ற, (வினை) சோம்பியிரு, வீண்காங்கழி, பயனற்றவகையில் பொழுதைப்போக்கு, இயந்திர வகையில் உரிய செயலாற்றாமல் இயங்கு, உந்துவண்டி விமான முதலியவற்றின் வகையில் நீராவிப்புழையின் வாயடைக்கப்பெற்று மெல்ல இயங்கு.
ignitionதீப்பற்றவைப்பு, தீப்பற்றுகை, தீப்பிடித்துள்ள நிலை, அழல்மூட்டும் வகைமுறை, உள்வெப்பாலையில் தீக்கொளுவும் ஏற்பாடு.
indicatorசுட்டிக்காட்டுபவர், பொருளளவு விசைவேகம் தொலை முதலியவற்றினைப் பதிவுசெய்து சுட்டிக் காட்டும் கருவி.

Last Updated: .

Advertisement