உந்துவண்டி தொடர்புடைய சொற்கள் Automobile terms
உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்
A list of page : Automobile terms
Terms | Meaning / Definition |
---|---|
accelerator | முடுக்கி/ வேகப்படுத்தி |
alternator | ஆடலாக்கி |
a-arm | கவைக்கரம் - சீருந்து சக்கரத்துடன் பிணைக்கும் கவை வடிவ தொங்கல் அமைப்பு |
air-flow cooling system | காற்றுக் குளிரலமைப்பு |
air-fuel mixture | காற்றெரிபொருள் கலவை |
air break | காற்று நிறுத்தி |
air intake system | காற்றிழுவமைப்பு - ஒரு காற்றுக்கலக்கி விசைப்பொறியில் (carburettor engine) வெளிக்காற்று காற்று வடிப்பி (air-filter) மூலம் காற்றுக்கலக்கிக்குள் (carburettor) நுழையும்; பின்பு அது உள்ளிழு பன்மடிமம் (intake manifold) மூலமாக கலன்களுக்குள் (cylinders) நுழையும்; உட்செலுத்தல் விசைப்பொறியில் (fuel injection engine) காற்று காற்றிழுவி எனப்படும் நீண்ட தூம்பு மூலமாக காற்று வடிப்பிக்குள் நுழைகிறது. பின்பு காற்றுப்பாய்வளவி (air-flow meter) மூலமாக நெரிப்பறைக்குள் (throttle chamber) சென்று, அதன் பின்னர் விசைப்பொறிக்குள் நுழைகிறது. |
all wheel drive | அனைத்தியக்க, அனைத்தியக்கூர்தி - |
anti-freeze | உறைத்தடுப்பி - குளிர்பொருள் கடும்பனிக்காலத்தில் உறையாமல் இருக்க, அதன் உறைநிலை குறைக்க வைக்கும் சேர்ப்பொருள் |
Anti-lock braking system | (A.B.S.) வழுக்கா நிறுத்தி (நிறுத்தமைப்பு) - சக்கரம் பூட்டிய நிலையை உணர்ந்து தன்னியக்கமாக விடுவிக்கும் நிறுத்தமைப்பு; இதனால் வழுக்கம் ஏற்படாமல் இருக்கும் |
assembly-line | ஒன்றுகூட்டு வரிசை |
automatic transmission | தன்னியக்கப் பரப்புகை |
automobile | தானியங்கி |
axle | அச்சாணி |
air filter | காற்று வடிகட்டி |
air pump | காற்றுப்பம்பி |
accelerator | முடுக்கி |
accelerator | முடுக்குப்பொறி, முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி, செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு, விசைத்தசை. |
automobile | தானியங்கி, மோட்டார் வண்டி, (பெ.) தானே இயங்குகிற. |
axle | இருசு, சக்கரத்தின் அச்சு. |