உந்துவண்டி தொடர்புடைய சொற்கள் Automobile terms
உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்
Terms | Meaning / Definition |
---|---|
Anti-lock braking system | (A.B.S.) வழுக்கா நிறுத்தி (நிறுத்தமைப்பு) - சக்கரம் பூட்டிய நிலையை உணர்ந்து தன்னியக்கமாக விடுவிக்கும் நிறுத்தமைப்பு; இதனால் வழுக்கம் ஏற்படாமல் இருக்கும் |
Camshaft | நெம்புருள் தண்டு - விசைப்பொறியின் உள்ளெடுப்பு மற்றும் வெளியேற்ற ஓரதர்களை திறந்து மூடச் செய்யும் சுழலும் சாதனம் |
Electronic fuel injection | Electronic fuel injection (EFI) SYSTEM மின்னணு (எரிபொருள்) உட்செலுத்தமைப்பு - இதன் உறுப்புகள் அ)எரிபொருள் வழங்கமைப்பு (fuel delivery system); ஆ)காற்றிழுவமைப்பு (air intake system); இ)மின்னணு கட்டுப்பாடமைப்பு (electronic control system) |
Multipoint fuel injection | (M.P.F.I.) பன்முனை உட்செலுத்தல் - இந்தச் உட்செலுத்தலில் ஒவ்வொரு கலனிலும் பல உட்செலுத்திகள் (injectors) அமைந்துள்ளன; இதனால் காற்றெரிபொருள் கலவை (air-fuel mixture) சமமாக இருக்கும்; முடுக்கம் மற்றும் ஒடுக்கம் விரையும்; எரிபொருள் சிக்கனம் கூடும் |
power steering | விசைத்திருப்பி - நீரியக்க (hydraulic) மற்றும் மின்னியக்க திருப்பான் அமைப்பு; இது திரும்பும் சிரமம் குறைவாக உள்ளது |
pressure valve | அழுத்தவோரதர் |
rack and pinion steering | இத்திருப்பி அமைப்பில், பற்சிலி (rack) சக்கரங்களை இணைக்கும் அச்சாணியில் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லோடி திருப்பித்தண்டில் (steering shaft) அமைந்துள்ளது. பல்லோடியும்பற்சிலியும் சக்கரத்திருப்பி அமைப்பு திருப்பியக்கத்தை சக்கர அச்சாணியின் நேரியல் இயக்கமாக மாற்றுகிறது; |
rear wheel drive | பின்னியக்க, பின்னியக்கூர்தி - |
recirculating ball steering | மறுசுழல்பந்து திருப்பி - இந்த திருப்பி அமைப்பில் ஒரு பிடிமுனைக்கரம் மூலம் சக்கரத்தின் அச்சாணியுடன் பிணைக்கப்படுகிறது; பிடிமுனைக்கரம் ஒரு ஆரைச்சிறைப் பற்சக்கரம் மற்றும் புழு பற்றகரம் மூலம் திருப்பித்தண்டுடன் (steering shaft) பிணைக்கிறது. |
speed governor | வேகக்கட்டுப்பாட்டுக்கருவி |
steering rod | திருப்பிக் கரம் |
steering shaft | திருப்பித் தண்டு |
supercharged engine | மிகையூட்டு விசைப்பொறி - வாரியக்கியில் (belt-drive) அமைந்த காற்றமுக்கி (air-compressor) மூலம் காற்று கலனுக்குள் (cylinder) அழுத்தத்துடன் இறைக்கப்படும் விசைப்பொறி |
throttle-body | நெரிப்பகம் |
Throttle-body fuel injection | (TBI) நெரிப்பகச் உட்செலுத்தல் - ஒரு நெரிப்பகம் (throttle-body) மீது எரிபொருள் உட்செலுத்தப்படும் அமைப்பு; இதன் செல்யபாடு காற்றுக்கலக்கிக்கு (carburettor) நிகரானது, ஆனால் உட்செலுத்தல் (fuel injection) இதற்கு புறமாக அமைந்துள்ளது |
throttle chamber | நெரிப்பறை - உட்செலுத்தல் விசைப்பொறியில் (fuel injection engine) இது காற்றுப்பாய்வை (air-flow) கட்டுப்படுத்தும். இது மூடிய நிலையில் சீருந்து நிலையியங்கும் (idling); இதில் உள்ள மாற்றுவழியறை (bypass chamber) சிறிதளவு காற்றை விசைப்பொறிக்குள் விடுவிக்கிறது. மாற்றுவழியறைக்குள் காற்றுப்பாய்வை கட்டுப்படுத்தி விசைப்பொறியின் நிலையிருப்பு வேகத்தை மாற்றலாம் |
throttle plate | நெரிதகடு - நெரிப்பகத்தின் பெருமமான உறுப்பு; ஓட்டுநர் முடுக்கியை (accerator) அமுக்கினால், இந்தத் தகடு திறந்து காற்று விசைப்பொறிக்குள் நுழைய விடும்; சீர்வேகத்தின் (cruising speed) போது, இது நடுநிலையிலும், நிலையியக்கத்தின் (idling) போது இது முழுமையாக மூடியிருக்கும் |
Throttle position sensor | (TPS) நெரிநிலையுணரி - இந்த உணரி நெரிதகடில் (throttle plate) அமைந்திருக்கும்; இது மின்னணு உட்செலுத்தல் கணினியிடம் (EFI computer) நெரிதகடின் திறப்பு நிலையை தெரிவிக்கும் |
turbocharged engine | சுழலூட்டு விசைப்பொறி - வெளியேற்றகத்தில் அமைந்த சுழலி மூலம் காற்று கலனுக்குள் அழுத்தத்துடன் இறைக்கப்படும் விசைப்பொறி |
turbocharger | சுழலூட்டி |