voluntary | தன் விருப்பார்வச் செயலர், தனிமேளம், திருக்கோயில் வஸீபாட்டு முறையில் தொடக்க இடை இறுதிகஷீல் நிகழ்த்தப்பெறும் தனி இசைப்பேழை வாசிப்பு, தன் விருப்பார்வக் கோட்பாட்டாளர், சமயத்துறைத் தன்னியலாட்சியாளர், கல்வித்துறைத் தன்னயலாட்சி முறைமை, படைத்துறை-கடற்படைத்துறை முதலியவற்றில் தன் விருப்பார்வ ஆட்சேர்ப்பு முறைமை, குதிரை ஏற்ற வகையில் வேண்டா வீழ்ச்சி, (பெ.) தன்னியலான, மனமார்ந்த, தன் விருப்பார்ந்த, தன் விருப்பத் தேர்வான, தன்னார்வ முனைப்பான, வலிய முன் வரலான, புறத்தூண்டுதலற்ற, முன் வந்து ஏற்கப்பட்ட, கோராது வழங்கப்பெற்ற, மனமாரச் செய்யப்பட்ட, மனமாரத் தெரிந்து செய்யப்பட்ட, கைம்மாறு எதிர்நோக்காது செய்யப்பட்ட, தன் முனைப்பாகத் திட்டமிடப்பட்ட, தெரிந்து வேண்டுமென்றே செய்யப்பட்ட, தன் விருப்பச் செயல் விளைவான, தன் விருப்பார்வ வழங்கீட்டுத் தொகையினால் நடத்தப்படுகிற, முறைமன்றத் தலையீடின்றித் தாமாகச் செய்துகொள்ளப்பெற்ற, நிறுவனங்கள் வகையில் அரசியற் கட்டுப்பாடற்ற, உள்ளுறுப்பு நாடிநரம்பு முதலியவற்றின் வகையில் மூளையின் விருப்பாற்றல் துணிவினாலேயே இயக்கப்பட்ட. |