sweet | இனிப்பு, தித்திப்புப்பண்டம், மிட்டாய், இன்கூறு, இனிமைப்பகுதி, இனியார், காதற் கண்மணி, அன்பிற்கு உரியார், (பெ.) இனிய, இனிப்பான, இனிப்பு மிகுதியான, தெவிட்டுகிற, குமட்டுகிற, நறுஞ்சுவை வாய்ரநத, இன்மணம் உடைய, இன்னோசையுடைய, இன்னிழைவான, கார உணவல்லாத, காரம் ஊட்டப்படாத, புளிக்காத, புளிப்பேற்றப்படாத, உறைப்பற்ற, உப்புப் பதனிட்ப்படாத, உறைப்பு ஊட்டப்படாத, ஊசாத, கெடாத, நன்னிலையிலுள்ள, புத்தம் புதிய நிலையிலுள்ள, இன்னலம் வாய்ந்த, நிறைநல மார்ந்த, மென்னயம் வாய்ந்த, மெல்லிழைவான, கவர்ச்சியான, கண்கவர் வனப்புடைய, அழகான, மகிழ்ச்சியூட்டுகிற, மெல்லிணக்கமுடைய, மெல்லமைதி வாய்ந்த, முற்றெளிமை வாய்ந்த, தட்டுத்தடங்கல் அற்ற, அரிய, அன்புக்குமிய, பற்று மிக்க, பிடித்தமான, பாசத்தில் இழைந்த, காதல் கூர்வுடைய, பசப்புகிற. |
sweets | இனிய உணவு வகை, இனப்புப் பிட்டு, இன்களி, இனப்பழப்பாகு, இன்பாலேடு, இன்மணம், இனியதேறல் வகை, தேம்பாகுச் சுவையூட்டப்பட்ட தேறல், இன்குழம்பூட்டப்பட்ட தேய நற மருந்து, மனமகிழ்வூட்டும் பொருள்கள், விருப்பூட்டுஞ் செய்திகள், இன்பநுகர்வுகள். |