stud | குமிழ், குமிழ் முகப்பு, ஒப்பனைக் குமிழ்ப்புடைப்பு, ஒப்பனைக் குமிழ்முனைப்புப் பரப்பு, பெருந்தலை ஆணி, இருதலைக் குமிழ்மாட்டி, கழுத்துப்பட்டை முகப்பின் ஈரிணை தலைக் குமிழ் மாட்டி, வரிச்சலறைப்படும் குத்துக்கழி, தாற்றுமுள், குறுமுளை, குறுங்கிளை, கிளை அடித்தூறு, (வினை.) குமிழ்முகப்புகளால் அணிசெய், குமிழ் முகப்புகளால் வலிவூட்டு, சிதறலாகப் பொருத்து. |
study | படிப்பு, கல்வி, வாசிப்பு, ஆராய்ச்சி, ஆழ்நிலை ஆய்வு, ஆழ்நிலை ஏடாய்வு, கூராய்வு, நுண்ணாய்வு, ஐயநிலைத் தேர்வாராய்வு, பயிற்சி ஆய்வு, கலைத்துறைப்பயிற்சிப்பணி, இசைப்பயிற்சி வாய்பாடு, ஓவியர் பயிற்சித் தேர்ச்சிப்படம், அறிவாராய்ச்சித்துறை, ஆராய்ச்சிக்குரிய துறை, அறிவாராய்ச்சி ஏடு, கலை ஆராய்ச்சிஏடு, ஆராய்ச்சி ஏடு, ஆராய்ச்சியின் முதற்படி முயற்சி, விருப்பார்வம், ஆர்வ உழைப்பீடுபாடு, ஆர்வமுயற்சி, ஆர்வமுயற்சிக்குரிய ஒன்று, ஆர்வக்கவலைக்குரிய செய்தி, சிந்தனைக்குரிய செய்தி, நடிப்புக்குரிய உருப்பாடம், நடிப்புப்பகுதி மனப்பாடஞ் செய்பவர், ஆய்வறை, படிப்பறை, கலைப்பணியறை, (வினை.) கருத்தூன்றிப் படி, கூர்ந்து பயிலு, ஊன்றி அறிவுத்திறம் பெறப் பாடுபடு, அறிவு நோக்கமாகக் கொள்ளு, கல்வி பயிலு, தேர்வுநாடிப்படி, தேர்வுத்துறைநாடிப் பயிற்சி மேற்கொள், ஆராய்ச்சிசெய், அறியமுயலு, தேர்ந்தாராய், மனமார எண்ணிப்பார்த்து வகுத்தாராய்வு செய், ஆலோசனை செய், ஆலோசனைக்கு எடுத்துக்கொள், ஆலோசித்துக் கண்டுபிடி, நுணுகிக்காண், கூர்ந்து கவனி, நோக்கி ஆராய், நுணுகி ஆராய், சிந்தனையுடன் நோக்கு, தன்னைமறந்த சிநதனையில் ஆழ்வுறு, குறித்து அக்கறை கொள், குறித்துக் கவலைப்படு, கருத்தூன்றி முயற்சி செய், செய்து முடிக்கப்பாடுபடு, இடைவிடாது முயலு, இடைவிடாது சமாளிக்க முயற்சி செய், காத்திருந்து கவனஞ் செலுத்திப்பார், மனமார எண்ணிப் பார், செயல் செய்வதன் முன் பிறர் விருப்பம்- உணர்ச்சிகள்-நலச்சார்வு எதிர்வுகளை எண்ணிப்பார். |