stretch | நீட்டுதல், நீட்டநிலை, நீட்டம், பற்றியிழுப்பு, வல்லிழுப்பு நிலை, விரிவுப்பாடு, விரிவியல்பு, ஓரம், கோடி, முனை, நெடுவெளி, இடையறவில்லா அகல் பரப்பு, காலநீடெல்லை, தாவெல்லை, ஒருதிசை நீடெல்லை, வீச்சளவு, முயற்சியின் ஒரு விடாமூச்சளவு, விடாத் தொடர் எல்லை, நேர்கட்டம், பந்தயப் பாதையில் திரும்பா நேர்திசைப் பகுதி, உச்ச எல்லை, ஆற்றலின் முழுநிறைவளவு, உயர்வு நவிற்சி மிகைப்பாடு, (இழி.) ஓராண்டுச் சிறைத் தண்டனை, (வினை.) நீட்டு, நீள்வுறுத்து, பரப்பு, விரிவாக்கு, விரியச்செய், நேராக்கு, தொய்வு நீக்கு, நிமிர்த்து, நௌிவெடு, மடிப்பகற்று பற்றி இழு, இழுத்திறுலாக்கு, தசைநாண்களை, விறைப்பாக்க, வலித்திழு, நீட்டிக்கிடத்து, பரப்பி வை, முழுதுற நீட்டு, எட்டி நீட்டு, முழு விரிவுபடுத்து, மிகைப்படுத்து, சொற்பொருள் வகையில் எல்லைமீறி விரிவுபடுத்து, நீள், குறிப்பிட்ட நீளமுடையதாயிரு, நிண்டுகிட, பரவுறு, குறிப்பிட்ட பரப்புடையதாயிரு, பரந்து கிட, உடல் நீட்டிக்கிட, நீளத்தக்கதாயிரு, விரியத்தக்கதாயிரு, நீளும் இயல்புடையதாயிரு, விரியும் இயல்புடையதாயிரு, நெகிழ்வாற்றலுடையதாயிரு, இழுத்துத் தொங்கவிடு, (இழி.) தூக்கிலிடு. |
stretcher | நீட்டுபவர், விரித்து வைப்பவர், நீட்டுவது, விரித்து வைப்பது, கையுறை-தொப்பி முதலியன விரித்து வைப்பதற்குரிய கருவி, ஒவியர் திரை உறுதிச்சட்டம், தூக்கு கட்டில், நோயாளி-காயம்பட்டோர் ஆகியவர்களை இட்டுச் செல்லும் தூக்குபடுக்கை, படகுத் தண்டுகைப்பு விட்டம், இயந்திரக் கிடைநிலை உறுப்பு, இயந்திரக் குறுக்குச் சலாகை, சுவர் முகப்பு நீளவாட்டுக் கிடைச் செங்கல், மிகைநவிற்சி, புளுகு. |