sole | உள்ளங்கால், அடிபதி விலங்குகள் வகையில் அகங்கால், செருப்பு-புதைமிதி ஆகியவற்றின் வகையில் காலடித்தோல், காலுறை வகையில் உள்ளங்காற் பகுதி, கருவிகளின் அடித்தளம், இயந்திர அடித்தளம், பொருளின் அடித்தடம், வண்டியில் அடிப்பலகை, கலப்பை அடித்தட்டு, குழிப்பந்தாட்ட மட்டையின் அடிக்கட்டை, தச்சர் சீவுளியின் அடிப்பாளம், அடுப்பின் நிலத்தளம், கதவு-பலகணியின் அடிச்சட்டம், புத்தக மேலட்டை அடிவிளிம்பு, அடிச்சில்லு, அடிக்கட்டுமானம், (மண்.) செருகு பாறையின் அடிப்பரப்பு, (வினை.) செருப்புக்குக் காலடித்தோலிடு. |
solo | தனிக்குரலிசை, தனிக்குரல் வாய்ப்பாட்டு, தனிக்கைவரிசை ஆட்டம், சீட்டாட்டத்தில் தனிப்பொறுப்பாட்டம், பக்கவண்டியில்லாத மோட்டார் சைகளி, சீட்டில் ஐந்து பொறிக் கெலிப்புக் கேள்வி, விமான வகையில் துணையிலாத் தனிப்பறப்பு, (பெ.) துணையற்ற, தனியான, (வினையடை.) துணையின்றி, தனியாக. |