snap | சுடக்கொலி, நொடிப்பொலி, சிறுவெடிப்பொலி, சடக்கொலி, பொருக்கென அடைத்துக்கொள்ளும் ஒலி, வளைகாப்பு விற்பொருத்து, நிழற்பட நொடிப்பெடுப்பு, கடும்பனியுறைவு, சீடைவகை, பொருபொருப்பான சிறுபண்ணியம், சீட்டாட்டவகை, சிறுதிற நடிப்புப்பாணி, குறுகிய கால நடிப்பு ஏற்பாடு, சொடி, தெம்பு, செயலுக்கம், மொழிநடை விறுவிறுப்பு, புத்தார்வச் சுவை, (பே-வ) மிக எளிய செயல், எதிர்பாராத் திடீர் நிகழ்ச்சி, திடீர் ஏற்பாடு, (பெ.) திடீரான, எதிர்பாராது இடைவந்த, நொடியான, அதிர்வூட்டுகிற, விரைதீர்வான, (வினை.) ஒடி, சடக்கென நொடியச்செய், சடக்கென நொடிவுறு, முறி, அறுந்துவிடு, துண்டுபடுத்து, அறுந்துவிடச்செய், சுடக்கிடு, சடக்கெனும் ஒலிசெய், வெடி, சிறுநொடிப்புறு, சடக்கென மூடுவி, பொருக்கென அடைத்துக்கொள், திடீரென்று கௌவு, நாய் வகையில் சடக்கென்று கடி, கைத்துப்பாக்கிவெடிதீர், கைத்துப்பாக்கி வகையில் வெடிதீர்வுறு, நிழற்பட நொடிப்பெடு, சட்டென நிழற்படமெடு, உரியவரறியாமல் உடனடிநிழற்படமெடு, கடுகடுத்துப்பேச, சீறிவிழு, சினந்துபேசு, திடுமென இடையிட்டுப்பேசு, பொறுக்கி எடு, திடுமென இயங்கு, திடீரெனச் செயல் செய், சட்டென முடிவுசெய், சட்டென ஒத்துக்கொள், (வினையடை.) திடுமென, தடாலென, சடக்கென்ற ஒலியுடன். |