senior | மூத்தவர், மூப்பர், முன்னவர், உயர் மதிப்புடையவர், பதவியில் முற்பட்டவர், தேர்ச்சி மிக்கவர், அனுபவ மேம்பாடுடையவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மீமதிப்புத் தேர்ச்சியாளரில் முதல்வகுப்பில் முதன்மை நிலையுற்றவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பண்டை இலக்கிய மீமதிப்புப் போட்டித்தேர்வில் முதல்வர், பல்கலைக்கழகத்து இறுதியாண்டு மாணவர், ஒரே பெயருடையவர்களில் வயது மிக்கவர், (பெ.) மூத்த, வயதில மேம்பட்ட, பதவியில் மேற்பட்ட, அனுபவத்தில் முற்பட்ட, மிக்குயர் மதிப்பு வாய்ந்த. |
seniority | மூப்புநிலை, முன்மை, வயதுமேம்பாடு, மூப்பான வயதுடைமை, மேல்நிலை, பதவியில் முற்பட்ட தன்மை, அனுபவமூப்பு, அனுபவ முதிர்ச்சி மேம்பாடு, தர உயர்ச்சி நிலை, மதிப்பு உயர்நிலை, முந்துரிமைத்தகுதி, மூப்பர் தொகுதி. |