Word | Tamil Definition |
---|
reflect | ஒளிக்கதிர்களை வாங்கி எறி, ஒளியை எதிரடித்துக் காட்டு, பளிங்கு வகையில் எதிர்நிழலிடு, நிழலுருப்படுத்திக் காட்டு, ஆழ்ந்து நினை, சிந்தனை செய், மீட்டும் நினைவுக்குக் கொண்டுவா, திரும்பவும் நினைத்துப்பார், பழைய நினைவுகளில் ஆழ், எதிர் விளைவாக வழங்கு, மேற்படிவி, விளைவி, வழங்கு, வசைக்கூறுபடிவி, வசைக்குறிப்பு, எழுப்பு. |
reflected | எதிலொளியாக வீசப்பட்ட, ஒளிவகையில் எதிரடிக்கப்பட்ட, பிறரொருவரால் வழங்கப்பட்ட, பிறிதொன்றனிடமிருந்து பெறப்பட்ட. |
reflector | கதிரெறிபரப்பு, கதிர்களை மீள எறியும் பொருள் அல்லது மேற்பரப்பு, உருநிழல் எறிதளம், தெறிமுப்ப்பு வில்லை, வேண்டிய திசையில் ஒளிவாங்கி மீளச் செய்வதற்குரிய உட்குழிவுடைய வில்லை, படிவுருக்காட்டும் அமைவு, உருக்காட்டமைவு தொலைநோக்கி, படிவமைவுச் சாதனம், பழக்க வழக்க மனக்கோட்டங்கள் உருப்படிவித்துக் காட்டும் அமைவு, படிவமைவாளர், உருப்படிவித்துக் காட்டுபவர். |
reflecting | ஒளி எதிரடிக்கிற, ஒளிக்கதிர்களை வாங்கி எறிகிற, நிழலுருக் காட்டுகிற. |
reflection | ஒளிக்கதிர் வகையில் வாங்கி எறிதல், ஒளிவகையில் பட்டெறிதல், முட்டிமீளல், பட்டெறிவு, பட்டெறி வெப்பு, பட்டெறி வண்ணம், உருநிழலீடு, பிரதிபலிப்பு, உருநிழற்படிவு, உருநிழல், பிரதிபிம்பம், உள்மடி நரப்பியக்கம், விருப்பாற்றலுக்கு உட்படாத உணர்ச்சியின் உட்கோட்ட வளைவான நரப்பியக்கம், கண்டனக் குறிப்புடன் இகழ்தல், ஏளனக்குறிப்பு, வசைக்குறிப்பு, அவப்பெயர் தேடித்தரல், புகழ்க்கறைப்படிவு, புகழ்க்கறை, உண்ணினைவாற்றல், தன்னுள் நிகழ்பவற்றைத் தானே உணர்ந்துகொள்ளும் மன ஆற்றல், கருத்து, நினைவு, சிந்தனை, சிந்தனை தரும் விளக்கம், சிந்தனை உரை, பொருள் பொதிந்த உரை, செறிமொழி. |