Word | Tamil Definition |
---|
plural | (இலக்.) பன்மை, பன்மையெண், பன்மைப்பெயர் வடிவம், பன்மை வினைவடிவம், (பெ.) பன்மைகுறித்த, ஒன்றுக்கு மேற்பட்டதைக் குறிப்பிடுகிற, இருமை எண்முறை உள்ள மொழிகளில் இரண்டுக்கு மேற்பட்டதைக் குறிப்பிடுகிற, எண்ணிக்கையில் ஒன்றிற்கு மேற்பட்ட. |
pluralism | பல்பதவியாண்மை, ஒரே வேளையில் பல பதவிகளை வகித்தல், (மெய்.) பன்மை வாதம், மூலப்பொருள்கள் ஒன்றிற்கு மேற்பட்டவை என்று கொள்ளும் அனேகான்ம வாதம். |
pluralist | பல் பதவியாளர், ஒரே சமயத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட நிலைகளைத் தாங்குபவர், (மெய்.) பன்மைவாதி, அனேகான்ம வாதி. |
plurality | பன்மை, பலவாயிருக்கும் நிலை, பேரெண்ணிக்கை கூட்டம், திரள், ஒன்றிற்கு மேற்பட்ட பதவிகளை வகித்தல், ஒன்றிற்கு மேற்பட்ட மானியங்களைக் கைக்கொண்டிருத்தால், மற்றொன்றனோடு சேர்த்து வகிக்கப்படும் பதவி, வாக்குகள் முதலியவற்றின் வகையில் பெரும்பான்மை. |
pluralize | பன்மையாக்கு, பன்மை வடிவத்திற் கூறு, ஒன்றிற்கு மேற்பட்ட திருக்கோயில் மானியங்களை வைத்துக் கொண்டிரு. |