pop | திடீரென்ற வெடிப்பொலி, ஆடுகள் முதலியவற்றிற்கு அடையாளமிடுகையில் வைக்கப்படும் புள்ளி அல்லது பொட்டு, (பே-வ) நுரைத்துப் பொங்குகிற பான வகை, (வினை.) விரைந்த சிறு வெடிப்பொலி எழுப்பு, புட்டியிலிருந்து அடைப்புத் தக்கையை இழுக்கும்போது உண்டாவதைப் போன்ற ஒலிசெய், வெடிதீர், பறவை முதலியவற்றைத் துப்பாக்கியால் சுடு, திடுமென வை, திடுதிப்பெனப்போடு, விரைவாக இயங்கு அல்லது செல், திடீரெனக் கேள்வி கேள், (வினையடை.) விரைந்த வெடிப்பொலிவுடன், திடீரென, 'டப்' போன்ற ஒலிக்குறிப்புச்சொல். |
top | உச்சி, முகடு, மோடு, மேற்பரப்பு, மூடி, கொடு முடி, மலையுச்சி, சிகரம்,மண்டை, தலையுச்சி, முடியுச்சி, ஏட்டின் தலைப்பக்கம், ஏட்டுப்பக்கத்தின் மெல்விளிம்பு, வட்டரங்டக மோடு, ஊர்தி மோடு, உந்துகல இயந்திர மேல்மூடி, ஊர்தி உயர் நெம்பு இணைப்பு, தட்டு மேல் மூடி, கிழங்குச்செடி வகையில் தழைப்பகுதி, மேசை மேற்பரப்பு, உணவுமேசைத் தொலைக்கோடிப்பகுதி, அகழியின் புடைமேடை, நுற்புக்கான கைப்பொதி, ஒன்றரைக்கல் எடைகொண்ட இழை எடை அலகு, தலைமையர், உச்ச உயர்பதவியாளர், உச்ச உயர் பதவி, உச்ச மேனிலை, அயர்லாந்து வழக்கில் நேரவகையில் முற்பகுதி, சீட்டாட்ட வகையில் உச்சஉயர்நிலைச் சீட்டுக்கள் இரண்டில் ஒன்று. (கப்) கூம்புச்சி, (கப்) கூம்புச்சிப் பாய் (கப்) துணைப் பாய்மரக் கம்பமேடை, (பெயரடை)மேல்முகட்டிலுள்ள, உச்ச நிலையிலுள்ள, உச்ச உயர்படியான, உச்ச உஸ்ர் அளவான, (வினை) மூடி பொருத்து, மேல்வைத்து மூடு, முளைபொருத்து, மூடிபொருத்தியிணை, தொப்பி வை, மலையுச்சி ஏறு, உச்சி அடை, உச்சநிலை பெறு, உச்சிப்பகுதியாய் அமை, தாவர வளர்ச்சி கருதித் தலைப்பகுதி வெட்டு, கடந்து உயரமாயிரு, குறித்த உயரமுடையவராயிரு, கடந்துமேம்பாடு, மேம்பட்டிரு, விஞ்சு, மகுடமாயமைவி, முடித்துவிடு, ஒழுங்குபட முடிவுசெய்தமை, முழு நிறைவுறுத்து, குழிப்பந்தாட்டத்தில் பந்தின் மேற்பகுதியில் அடி, கப்பற் பாய்மரக்கைகளின் ஒரு முனைகடந்து ஒருமுனை உயர்த்து. |