knot | முடிச்சு, சிக்கல், நெருடு, இடர், புதிர், பிரச்சனை, உடுப்பின் ஒப்பனை இழைக்கச்சை, (கப்.) வேகமக்குங் கருவியல் முடிச்சுக்களால் குறிப்பிடப்படும் பிரிவு, 60க்ஷ்0 அடி கொண்ட கடல்துறை நீட்டலளவை அலகு, விரச்சினை-கதை நிகழ்ச்சி முதலியவைகளின் மையம், விலங்கினது உடம்பிலுள்ள கெட்டியான மொத்தைக்கட்டி, செடியின் காம்பு-கிளை அல்லது வேரில் காணப்படும் புடைப்பு, அடிமரத்தில் கிளை தோன்றுமிடத்தில் உண்டாகுங் கெட்டியான திரட்சி, அறுக்கப்பட்ட பலகையில் இத் திரட்சியினால் ஏற்படும் எதிரிழைப்பகுதி, செடிக்காம்வின் கணு, தொகுதி, கூட்டம், கணம், குலை, கொத்து, சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான இரட்டைத்தோள் சும்மாடு, (வினை) கயிறு முடிச்சிடு, முடிச்சாகக் கட்டு, ஆடை ஓர முடிச்சுக்களிடு, முடிச்சுக்களிட்டு ஆடைக்கரைகளுண்டாக்கு, புருவம் நெரி, நெருக்கமாக ஒன்றுபடுத்து, சிக்கவை, சிக்கப்படுத்து. |
note | தனிக்குரலிசை, இசைக் குறியீடு, சுரம், பறவைகளின் குரலிசைப்பு, தொனி, தனிப்பண்பு, உயரிக்கூறு, அடையாளக் குரல், அடையாளக் குரலிசைப்பு, கவனக் குறிப்பு, விவரம், நினைவுக் குறிப்பு, சுருக்கக் குறிப்பு, குறியீடு, குறிப்பீடு, குறிப்புரை, உரை விளக்கம், குறிப்புச் சீட்டு, கடிதக் குறிப்பு, அரசியலறிவிப்பு, பத்திரம், கைச்சீட்டு, உறுதி முறி, காசு முறி, சிறப்பு, பெருஞ்சுட்டு, (வினை.) உன்னிப்பாக நோக்கு, கூர்ந்து பார், குறி, கவனி, மனத்திற் பதியவைத்துக்கொள், குறிப்பீடு, குறித்துக்கொள், குறிப்புரை எழுது. |