Word | Tamil Definition |
---|
loo | வட்டமேசையில் ஆடப்படும் சீட்டாட்ட வகை, சீட்டாட்டத்தில் தண்டத்தொகையைப் பொதுநிதிக்குச் செலுத்தும் நிலை, (வினை) ஆட்டத்தவறுகளுக்காகத் தண்டத்தொகைக்கு உட்படுத்து. |
look | நோக்கு, பார்வை, நோட்டம், நோக்குந் திசை, தோற்றம், சாயல், (வினை) நோக்கு, கவனம் செலுத்து, நோட்டமிடு, உற்றுப்பார், நாடு, கவனி, பக்கமாகத்திரும்பு, கண்ணுறு, எதிர்முகமாகு, தோற்று, தோற்றமளி, போலத்தோன்று, திசையில் சாய்வுறு, திசைநாடிச் செல்வது போன்றிரு, எதிர்நோக்கு, நோக்கால் உணர்த்து, நோக்கால் தெரிவி, தேர்ந்துகாண், தேர்ந்ததாராய், கண்டறுசெய், கண்டுறுதி செய், திசைநோக்கி அமைவுறு. |
loom | நெசவுத்தறி, துடுப்பின் கைப்பிடி. |
loop | கண்ணி, கயிற்று மடிப்பு வளையம், கொளுவி, உலோகக் கம்பிகளின் மடிகிளை, பிரிந்துசேருங் கிளை, மையவிசை இருப்புப்பாதையின் சுழல் மடி வளைவு, பனிச்சறுக்காட்டத்தில் ஒரு திசைக் சறுக்கு வளையம், (வினை) இழைகயிறு முதலியவற்றால் கண்ணியிடு, மடிப்பு வளையமிடு, கொக்கிபோல் வளையச்செய், கொக்கிபோல் வளை, கொளுவு, வளைந்துமடி, சடைமடி, புனைவி, சூழ், சூழ்ந்துபற்று, வளையங்களால் இணை, கொளுவியால் பொருத்து. |
loot | (இ.) கொள்ளை, சூறை, பறிக்கப்பட்ட பொருள், இலஞ்சம்ம, நேர்மையற்ற கைக்கூலி இறுப்பு, (வினை) கொள்ளை யடி, சூறையாடிக் கெண்டுசெல். |