leg | கால், விலங்கின் கால், விலங்கின் கால் இறைச்சி, கால் எலும்பு, மரம்-நெட்டி ஆகியவற்றலான செயற்கைக்கால், மேசை-நாற்காலி-இயந்திரங்கள் ஆகியவற்றின் கால், ஆதார உறுப்பு, ஆதாரப்பகுதி,. உடையின் கால் பகுதி, கவர்க்கோலின் பக்கக் கால், முக்கோனத்தில் அடிவரையல்லாத பக்கம், பாய்க்கட்டமாறாமல் மரக்கலம் செல்லுந்தொலை, பறக்குந் தொலைவின் கட்டம், பயணத் தொலைக் கட்டம், ஒரு காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு செய்யப்படும் வணக்கமுறை, ஏமாற்றுக்காரன், விளையாட்டில் தொடர் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதி அல்லது நிகழ்ச்சிக் கெலிப்பு, மரப்பந்தாட்டத்தில் மட்டை ஆட்டக்காரருக்குப் பின்னால் வலப்பக்கத்திலுள்ள ஆட்டக்களப் பகுதி, (வினை) நட, முடுகி நடைகட்டு, காலைப் பக்கம் அல்லது மேற்சுவரில் உதைத்துச் சுருங்கைக் கால்வாயிற் படகைச் செலுத்து. |
legal | சட்டஞ் சார்ந்த, சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட, சட்டப்படி உரியதான, சட்டத்தினால் நியமிக்கப்பட்ட, சட்டக்கட்டுப்பாட்டுக்குரிய, நேர்மைப் பொருத்தமின்றிச் சட்டப் பொருத்தத்தால் ஏற்றக்கொள்ளப்பட்ட, சட்டப்பொருத்தத்தால் எற்றுக்கொள்ளப்பட்ட, சட்டத்திற்கு உடன்பாடான, நம்பிக்கையினாலன்றி யூதர் பழைய சமயசித்தாந்தப்படி தொண்டு செய்வதுமூலமே உய்திப்பெறுவதற்குரிய. |