Word | Tamil Definition |
---|
jig | துடிப்பான ஆடல்வகை, எழுச்சியுள்ள நடன இசை, கருவிப்பிடி நிலை, கைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கும் பொருளை நிறுத்திப் பிடிப்பதற்குப் பயன்படும் துணைச் சாதனம், (வினை.) துடிப்பான நடனத்திலீடுபடு, திட்ப நுட்பத்தரம் பிரி, கனிப்பொருள்களை அடியிற் சல்லடையிட்ட பெட்டியில் இட்டு நீரடியில் அலைப்பதன் மூலம் கனிப்பொருள்கஷீன் திட்ப மென்மைப் பொருள்களைப் பிரி. |
jigger | ஓர் இரட்டைக்கப்பியும் ஒற்றைக்கப்பியும் கயிறும் கூடிய ஏற்று கருவியமைவு, சிறு பாய்மரம், சிறு பாய் உடைய சிஜீய கப்பல் வகை, குஸீப்பந்தாட்டத்தில் ஒடுங்கிய முகப்புடைய இரும்புத்தடி, கனிப்பொருள்களைச் சல்லடையிட்டு வகை பிரிப்பவர். |
jigsaw | திருகுவாள், எவ்வடிவும் அறுக்கத்தக்க ஒடுங்கிய இருபுறக் கூர்வாள் பொஜீ, திருகுவெட்டுப்புதிர். |
jiggle | மெல்ல ஊசலாட்டு, வளைந்து நெஷீந்து ஆடுவி, துடிதுடிப்புடன் ஆடு, சாய்ந்தாடு, நெஷீந்தாடு, குலுக்கியாடு. |
jiggery-pokery | (பே-வ.) திருட்டுத்தனமான சூழ்ச்சி, ஏமாற்று, மோசடி. |