Word | Tamil Definition |
---|
fur | விலங்கின் மென்மயிர், குறுமென் மயிர்தோல், நோயாளி நாவிற் படரும் வெண்படலம், கொதி கலங்களினுட் படியும் சுண்ணக்கரியகைச் சத்து, (வினை) குறுமென்மயிர் போர்த்து, குறுமென்மயிராடை அணிவி, குறுமென்மயிர் போர்த்தப்பெறு, குறுமென் மயிர்த்தோல் கரைவரியமை, கொதிகலத்தினுள் சுண்ணக்கரியகை படிவி, கொதிகலத்தினுட் சுண்ணக்கரியகை படி, நோயாளியின் நாவின்மீது வெண்படலம் படர்வி, வேம்பாவின் பொருக்கு அகற்றித்துப்புரவுசெய், நிலத்தளப் பிளவுகளில் மரத்துண்டுகளைச் செருகித் தளத்தைச் சமப்படுத்து. |
fury | சீற்றம், கொடுவெறி, போரில் மூர்க்கமான பாய்ச்சல், வானிலைச்சீற்றம், நோய்க்கொடுமை, ஆண்மாரி, பழிகாரி, சண்டைக்காரி. |
furs | விலங்கு வகைகளின் குறுமென்மயிர் அடர்ந்த தோல்கள், குறுமென்மயிர் அடர்ந்த தோலாடைகள், குறு மென்மயிர்த்தோல் உள்வரி அல்லது கரை வரியாக இணைந்த உடைகள். |
furl | மடக்கிக் கட்டிவை, மடித்து வை, விடு, சுருள்வுறு, மடிப்புறு. |
furry | மென்மயிருடன் கூடிய மெல்லிய விலங்குத் தோலினாலான, மென்மயிர்த்தோலினால் செய்யப்பட்ட ஆடை அணிந்த, மென்மயிர்த் தோலினால் மூடப்பட்ட. |