Word | Tamil Definition |
---|
defend | பாதுகாப்புச் செய், காவல் செய், தாக்குதலை எதிர்த்து நில், படைக்கலத்தாக்குதலை எதிர்த்து விலக்கு, தீமை எதிர்த்துப் போராடு, இன்னல் தடுத்தாதரி, காப்பாற்று, (சட்) அழிவழக்காளருக்கெதிராக உரிமை காத்து நில், குற்றச்சாட்டுக்கு எதிர் விளக்கமளித்து வழக்காடு, எதிர்வழக்காடு, வழக்குரைஞர் வகையில் எதிர்வாதி பக்கம் வாதாடு, எதிர்வாதிசார்பில் வழக்கு நடத்து. |
defended | பாதுகாக்கப்படட, காவல் செய்யப்பட்ட, அரண்காப்புச் செய்யப்பட்ட, தாக்குதலுக்கு எதிராகத் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் முற்றுவிக்கபட்ட. |
defender | பாதுகாப்பாளர், ஆதரவாளர், பெற்ற வாகை வீரப் பதவியை இழந்துவிடாமல் காப்பவர். |
defendant | பாதுகாப்பவர், (சட்)எதிர்வாதி, பிரதிவாதி. |
undefended | காப்பற்ற, நன்கு பாதுகாக்கப்பட்டிராத, ஆள் வகையில் துணையில்லாத, பாதுகாப்பில்லாத, வழக்கு வகையில் எதிர்வழக்காடப் பெறாத. |