cross
translation and definition "cross", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cross | கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம், இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை, கிறித்தவ சமயச் சின்னம், கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம், வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம், ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல், சிலுவைவடிவான நினைவுச் சின்னம், சிலுவை இருந்த இடம், சிலுவையமைந்த நகர மைய வெளி, சிலுவை வடிவப் பதக்கம், கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை, கிறித்தவ சமயம், சிலுவை உருவம், சிலுவைக்குறி, கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு, நங்கூர அடிப்பகுதி, நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல், குறுக்கீடு, குறுக்குவழி, முரண்படு நிகழ்ச்சி, இடையூறு, இன்னல், தொல்லை, துன்பம், சோதனை, இனக்கலப்பு, கலவைப் பிறவி, கலப்பினம், இடைப்படு நிலை, இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை, கெடுவழக்கு, நேர்மைக் கேடு, ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை, ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு, (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற, குறுக்கான, குறுக்கு வட்டமான, குறுக்குவெட்டான, குறுக்கிடுகிற, குறுக்குச் சாய்வான, எதிரெதிராகப் பின்னிய, பின்னி இணைந்த, பின்னிக் குறுக்கிட்ட, தலைமாறிய, இனக்கலப்பான, முரணான, எதிரான, சிடுசிடுப்பான, இரண்டகமான, நேர்மையற்ற, (வி.) சிலுவைக் குறியிடு, சிலுவை வடிவாக அமை, பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள், குறுக்குக்கோடிடு, குறுக்காகவை, எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு, பக்கத்துக்குப் பக்கமாகச் செல், குறுக்கே நட, தாண்டிச் செல், தாவு, குறுக்காக வெட்டு, வெட்டிச்செல், குறுக்காக அமை, முழு அகலமளாவு, இனம் பின்னிக்கலப்புச் செய், பின்னிக்கலப்புறு, காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு, குறுக்காக எழுது, தடை செய், விருப்பம் கெடு, மீறி நட, சந்தி, எதிரெதிராகக் கடந்துபோ, குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர். |
crosse | கனேடியப் பந்து விளையாட்டு வகையில் பந்தைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் வலையுடைய வளைதடி. |
across | குறுக்காக ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கமாக சிலுவை வடிவில் சந்தித்து மறுபக்கத்தில் மேலும் மேலும் கூறி நம்பவை. |
crossed | குறுக்காக வைக்கப்பட்டுள்ள, சிலுவைக்குறி போட்டுள்ள, குறுக்கிட்டுக் கெடுக்கப்பட்ட. |
crosses | அலகுநிறை (தகரத்தகடு) |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Cross | Crossed | Crossed | Crossing |