crib | மாட்டுத்தொழு, தீவன அழிஅடைப்பு, தீனித் தொட்டி, கூலப்பெட்டி, உப்புக்குடுவை, குப்பைத்தொட்டி, மட்பாண்ட முதலிய வற்றுக்கான கூடை, மீன் கூடை, தொட்டில், சிறு அறை, குடில், குச்சு வீடு, இடுக்கமான இடம், சிறு அடைப்பு, மணற்பாங்கான இடத்தில் அணை கடைக்கால்களுக்கு இடையே கல்-மண்ணிட்டு நிரப்புவதற்குரிய மரத்தாலான பணிச்சட்டம், சுரங்க வழியமைப்பு ஆதாரப் பணிச்சட்டம், சிறு திருட்டு, திருடிய சிறு பொருள், நுற் கருத்துத் திருட்டு, திருட்டு ஏட்டு வெளியீடு, மாணவர் திருட்டுப் பாடற்குறிப்பு, மறைமொழி பெயர்ப்பு, சீட்டாட்ட வகையில் ஆட்டக்காரர் பயன்படுத்தவல்ல கழி சீட்டு, (வி.) கொட்டிலில் தீவனமிடு, தொட்டியில் இடு, கூடையில் வை, தொட்டிலில் கிடத்து, இடுக்கமான இடத்தில் அடைத்து வை, சிறு திருட்டுச் செய், கருத்துத் திருடு, உரிமையின்றி வெளியிடு, இசைவின்றிப் படிசெய். |
scribe | எழுத்தர், படியெடுப்பவர், செயல் துணைவர், யூதரிடையே ஆவணப் பாதுகாப்பாளர், யூதசமயவாதச் சட்ட வல்லுநர், வரைகோல், செங்கல்-கட்டை ஆகியவற்றில்படிகாட்டும் வரையிடுவதற்குரிய கூர்ங்கருவி, (வினை.) வரைகோலாற் கோடிடு, குறி, குறியிடு, உள்வரியிடு, எழுத்தராய் வினையாற்று. |