Word | Tamil Definition |
---|
chap | வெடிப்பு, குளிர் பனி காரணமாக தோலில் ஏற்படும் கீறல், பனி வெடிப்பு, நிலவெடிப்பு, தட்டுதல், மோதுதல், (வி.) வெடி, பிள, வெடிப்புண்டாக்கு, தட்டு. |
chape | வாளுறை முனையிலுள்ள உலோகத் தகடு, போர்க்கருவியின் உறையை அரைக்கசையோடு இணைக்கும் கொளுவி, அரைக்கச்சையின் சறுக்கு வளையம். |
chappy | வெடிப்புகள் நிறைந்த, பிளவுகள் செறிந்த. |
chapel | திருக்கோட்டம், தனிப்பட்ட தொழுகையிடம், சிறிய துணைத்திருக்கோயில், கோயில் வீடு, மனைவழிபாட்டிடம், நிறுவனங்களின் கோயில் மனை, கல்லறைக் கூடத்திலுள்ள தொழுமிடம், திருக்கோயிலில் தனிப் பலிபீடம் கொண்ட சிறு அறை, நாட்டுத் திருச்சபையினின்றும் வேறுபட்ட நெறியினர் தொழுமிடம், தனித் திருக்கோட்ட வழிபாடு, பாடகர்குழு, பல்லியம், அச்சு அலுவலகம், நாளச்சுத் தொழிலாளர்கள் சங்கம், நாளச்சுத் தொழிலாளர்கள் கூட்டம். |
chapped | வெடிப்புடைய, பனி வெடிப்பினால் தோல் தடித்த, வெப்ப வெடிப்பினால் மண் கெட்டியான, குறுகத் தறித்த. |