Word | Definition |
---|---|
rabbinical | யூத குருமார்களுக்குரிய, யூதகுருமார்கள் கருத்துக்ள் சார்ந்த, யூதசட்ட வித்தகர் கல்விக்குறிய, யூத சட்டவித்தகர் மொழிநடைத் தொடர்பான. |
rabid | சீறுகிற, முரட்டுத்தனமாகச் செயலாற்றுகிற, முரட்டுப்பிடிவாகமுள்ள, நாய்வகையில் வெறிபிடித்த, நாய் வெறிநோய் சார்ந்த. |
racemose | (தாவ) துணர்போன்ற, தலைக்காம்பின் மீது சரிசம சிறுகாம்புடைய கொத்துமலர் வடிவான, துணர் சார்ந்த, துணர்களையுடைய, கொடிமுந்திரிப்பழக்குலை போன்ற. |
racial | இனஞ்சார்ந்த, குலமரபுக்குரிய, குடிமாபின் விளைவான, இனங்காரணமான, இனம்பற்றிய, இனத்தொடர்பான. |
rackety | பேரிரைச்சலான, மகிழ்வூக்கமுடைய. |
racy | தாய்நிலச்சுவையுடைய, மூலமரபுப்பண்பு வழாத, தினச்சுவை மணமுள்ள, தனிச்சிறப்பு வாய்ந்த, கருத்துக் கிளர்ச்சி தருகிற, உவ்ர்ச்சி தூண்டுகிற., காரசாரமான, விறுவிறுப்புடைய. |
radiate | விரிந்து செல் கதிர்களையுடைய, ஆரைகள் போல் அமைக்கப்பெற்ற உறுப்புகளையுடைய, (வினை) ஒளிக்கதிர்களை வீசு,. வெப்பக்கதிர்களைப் பரப்பு, எறட்டு, ஒளி வகையில் சூழ்ந்து பரவு, வெப்பவகையில் கதிர்களாகப் புறஞ்செல், மின்காந்த அலைகளைப் பரப்பு, மையப்புள்ளியிலிருந்து விலகிச் செல், மைய இடத்தினின்று புறமாக வீசு, உயிர்த்துடிப்பு-அன்பு-களிப்பு முதலியவற்றைப் பரவச்செய். |
radicular | முளை வேருக்குரிய, பல்-நரம்பு முதலியவற்றின் வேர் சார்ந்த. |
radio-active | பொருள் வகையில் கதிரியக்கமுடைய கதிர்கள் வகையில் கதிரியக்கப் பொருள்களால் உமிழப்பட்ட. |
radio-carpal | ஆரை எபினையும் மணிக்கட்டினையும் சார்ந்த. |