கிரந்தம் விரும்பேல்

தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

#கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1உக்கிரம்

கடுமை
தீவிரம்

2உச்சரி

(எழுத்தை சொல்லை)ஒலித்தல்
(ஒரு சொல்லை)சொல்லுதல்

3உச்சரிப்பு

(எழுத்தின் ,சொல்லின்) ஒலிப்பு முறை
(மந்திரம் முதலியவை)சொல்லும் முறை

4உதயம்

தோன்றுதல், பிறத்தல்
எழுதல், காலை

5உதரம்

6உதாசீனம்

புறக்கணிப்பு
விருப்பு வெறுப்பு இன்மை
அலட்சியம்

7உதாரணம்

see எடுத்துக்காட்டு

8உதிரம்

குருதி

9உதிரி

(ஒன்றோடு ஒன்று இணையாமல்)தனித்தனியாக இருப்பது
உதிர்ந்த பொருள்
உதிர்ந்த நெல்
பெரியம்மை
சிறு கீரை
பிட்டு
செவ்வாழை

10உத்சவம்

ஊருலா, ஊர் உலா

11உத்தரம்

வடக்கு
(வீடுகளில் கூரையைத் தாங்குவதற்காக) இரு பக்கச் சுவர்களை இணைத்துப் போடப்படும் நீண்ட மரக்கட்டை அல்லது இரும்புக் கிராதி
(பாலம் போன்றவற்றில் ) சுமையைத் தாங்குவதற்காக இரண்டு தூண்களை இணைக்கும், சீமெந்தினால் ஆன இணைப்பு

12உத்தரவாதம்

உறுதி
பொறுப்பு

13உத்தரவு

ஆணை
அனுமதி

14உத்தியோகபூர்வ

அரசமுறை

15உத்தியோகப்பூர்வ

முறையான

16உத்தியோகம்

அலுவல்

17உத்தேசம்

குத்துமதிப்பு

18உத்வேகம்

ஊக்கம்

19உப

முக்கிய பகுதியாக அமையாதது, துணை, கிளை
தலைமைக்கு அடுத்தபடியானதைக் குறிக்க உதவும் ஒரு சமஸ்கிருத உபசர்க்கம் (எ.கா - உபதலைவர்)

20உபகரணம்

see துணைக்கருவி

21உபகாரம்

(ஒருவருக்குச் செய்யும்) உதவி
நன்மை

22உபசாரம்

see பணிவிடை.

23உபதேசம்

அறிவுரை
நல்லுரை

24உபதேசி

அறிவுறுத்துதல்
(மந்திரம் )கற்றுத்தருதல்
போதித்தல்

25உபத்திரவம்

இடைஞ்சல்
தொல்லை
உடல் உபாதை
துன்பம்
தொந்தரை
வேலைக்கு அல்லது நிம்மதிக்கு ஏற்படும் இடைஞ்சல்

26உபத்திரவம் ,உவத்திரவம்

வேதனை

27உபத்ரவம்

ஊறு
தொந்தரவு

28உபநயனம்

பூணூல் அணியும் சடங்கு

29உபநியாசம்

பிரசங்கம்
சொற்பொழிவு

30உபந்நியாசம்

விரிவுரை/சமய சொற்பொழிவு

31உபம்

இரண்டு

32உபயம்

நன்றி
இரண்டு
அறச்சாலை அல்லது கோயிலுக்கு அளிக்கும் கொடை

33உபயோகம்

பயன்

34உபரி

see மிகை

35உபவாசம்

நோன்பு

36உபாயம்

வழி

37உருசி ,ருசி

சுவை

38உற்சவம்

விழா

39உற்சாகம்

விறுவிறுப்பு,ஊக்கம்

40உல்லாசம்

see உவகை

41உவமானம்

உவமை

42உஷார்

எச்சரிக்கை
விழிப்பு

43உஷ்ணம்

வெப்பம்

கிரந்தம் விரும்பேல்

கிரந்தம் என்றால் என்ன?
வடமொழி(சமஸ்கிருத) சொற்களை தமிழ்மொழியில் எழுத உருவாக்கப்பட்ட எழுத்து முறையாகும். கிரந்த மெய் எழுத்துக்கள் ஶ், ஜ், ஷ், ஸ், ஹ், க்ஷ், ஶ்ரீ.

மணிப்பிரவாளம் அல்லது மணிப்பிரவாள நடை என்றால் என்ன?
தமிழோடு வடமொழியும் விரவி நடக்கும் தமிழ் உரைநடை. இம்முறை தமிழோடு 13 ஆம் நூற்றாண்டில் இணைந்தது.

கிரந்த சொற்கள் தமிழோடு இருப்பதனால் நமக்கு என்ன பிரச்சனை?
என்று கேட்டால் ஒன்றும் இல்லை ஆனால் இதே நிலை நீடிக்குமாயின் தமிழ்மொழி பல சொற்களை கடன்வாங்கிய கடனாளியாக ஆகிவிடும். தாயின் பெயரால் மகன் கடன்வாங்குவது தப்பாக தெரிந்தால் இன்நிலை தொடராது. நமது முன்னோர்கள் சிலர் வாங்கிய கடனை நாம் அடைப்போம். நாமும் கடன் கொடுத்துள்ளோம் என்பதனையும் மறக்க கூடாது.

எடுத்துக்காட்டாக ஒரு சொல்

“சேஷ்டை” என்பது ஒரு வடசொல் இதற்கு இணையான தமிழ் சொல் “குறும்பு” இவற்றை நாம் தூய தமிழ் சொற்கள் என்று அழைக்கலாம்.